திருவாரூர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறையால் டயாலிசிஸ் செய்து கொள்ள முடியாமல் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம் முழுக்க பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையால் கடும் வறட்சி நிலவுகிறது. குடிப்பதற்கே பல இடங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் சிறுநீரகப் பிரச்சனைக்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தண்ணீர் இல்லாததால் டயாலிசிஸ் சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
credit ns7.tv