மேட்டூர் மஞ்சபள்ளி உபரி நீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீர் மேலாண்மை மற்றும் நிலத்தடி நீர் உயர்த்துவது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுக்கு 300 டிஎம்சி குடிநீர் கடலில் கலப்பதாகவும், அந்த நீரை குழாய் மூலம் ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அரை நிர்வாணமாக சென்று மனு அளிக்க முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் விவசாயிகளை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
credit ns7.tv