வெள்ளி, 12 ஜூலை, 2019

சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்! July 12, 2019

சந்திரயான்-2  விண்கலம் வரும் 15ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இறுதிக்கட்ட சோதனைகளை இஸ்ரோ இன்று மேற்கொள்கிறது. 
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம், வரும் 15ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த விண்கலம் 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முன்னேற்பாடுகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற உள்ளன. 
News7 Tamil
சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவது தொடர்பான சிக்னல்கள், தொலைத்தொடர்பு என அனைத்து வகை செயல்பாடுகள் குறித்தும் முழுமையாக சோதனை செய்யப்பட உள்ளது. விண்கலத்தின் இறுதி கட்ட சோதனை நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். 
credit ns7.tv