ஞாயிறு, 14 ஜூலை, 2019

வறட்சியின் போது வெளியேறிய வனவிலங்குகள் மீண்டும் காட்டுக்குள் நுழைந்த அற்புதக்காட்சி! ..! July 14, 2019

Image
கோடைகால வறட்சியால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய விலங்குகள், மழைக் காரணமாக மீண்டும் வனப்பகுதிக்கு செல்வது, சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வறட்சி காரணமாக குடிநீருக்காகவும், உணவுக்காகவும் அதிகளவில் வெளியேறின. இந்நிலையில், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்த மழை காரணமாக பசுமை திரும்பியுள்ளதால், மீண்டும் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் வனத்துக்கு திரும்பி வருகின்றன. 
இதனைக் காணும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி அவற்றை புகைப்படம் எடுக்கின்றனர். விலங்குகளை புகைப்படம் எடுக்கும் போது அவற்றுக்கு  தொல்லை கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளனர். \
credit ns7.tv