வேதாரண்யம் பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயிகள், தங்கள் மாடுகளை விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கஜா புயலுக்கு பிறகு, மழை பெய்யவில்லை. கடும் வறட்சி காரணமாக நீராதாரங்களில் தண்ணீர் வற்றியது. இந்நிலையில், வறட்சியால் கால்நடைகளுக்கு போதிய உணவு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வேறு வழியின்றி விவசாயிகள், தங்களது கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும், என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv