சென்னை விமான நிலையத்தில் நாளை நள்ளிரவு முதல் புதிய வாகன திட்டம் கொண்டுவரப்படுகிறது.
அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் என்னவெனில், விமான நிலையத்திற்கு வாகனங்கள் வந்தால் முதல் 10 நிமிடங்களுக்கு இலவசம் என்றிருந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் புறப்பாடு (Domestic and International departures) பகுதிக்கு வரும் வாகனங்கள் கட்டணமின்றி பயணிகளை இறக்கி விட்டு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வாகனங்களை புறப்பாடு பகுதிகளில் நிறுத்தி வைத்தால், 4 மடங்கு வாகன கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தங்களில் ஒரு வாகனத்திற்கு 30 நிமிடங்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் எனவும் வாகனங்கள் வெளியேறும்போது அந்த அட்டையை திருப்பி வழங்கிவிட்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
credit ns7.tv