ஆத்தூர் அருகே பெய்த கனமழையால் முட்டல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், மதகுகளை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருவது, விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முட்டல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. குடிமராமத்து பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் ஏரியின் மதகுகளில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது.
மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய நீர், அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து தண்ணீர் வீணானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, ஏரியிலிருந்து வெளியேறும் நீரை உடனே தடுத்து நிறுத்தி, சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
credit ns7.tv