அந்தியூர் அருகே மலைப்பாதையில் காட்டு யானை சுற்றித்திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தமிழக - கர்நாடக சாலையில் தட்டக்கரை எனும் இடத்தில், காட்டு யானை ஒன்று மூங்கில் தூர்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து சாலையில் யானை சுற்றித்திரிய ஆரம்பித்ததால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
பின்னர் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வறட்சியின் காரணமாக உணவு மற்றும் நீரைத் தேடி யானைகள் வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் வருவது தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களிலும் நடந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv