வியாழன், 1 ஆகஸ்ட், 2019

12 மணி நேரத்தில் 35 கோடி மரங்கள் நட்டு எத்தியோப்பியா உலக சாதனை...! August 01, 2019

Ns7.tv
Image
தட்பவெப்ப மாறுதலை எதிர்கொள்ளவும், மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கடந்த ஜூலை 29ம் தேதி, 12 மணி நேரத்தில் 35 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்டு எத்தியோப்பியா உலக சாதனை புரிந்துள்ளது.
Green Legacy என அழைக்கப்படும் மரம் நடுவதற்கான முயற்சியை எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமத் முன்னெடுத்து, அதற்கான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்னர் எத்தியோப்பிய மக்களிடம் கொண்டுசேர்த்தார். இதனடிப்படையில், எத்தியோப்பிய நாட்டில் உள்ள 1000க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எத்தியோப்பிய பிரதமரின் இந்த முன்னெடுப்பிற்கு ஒத்துழைத்த எத்தியோப்பிய மக்கள், தங்கள் பகுதிகளில் மரங்களை நடத்தொடங்கினர். இதனை அடுத்து, முதல் 6 மணி நேரத்தில் 15 கோடி மரங்கள் நடப்பட்டது என அந்நாட்டு பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அடுத்த 6 மணி நேரத்தில் நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை 35 கோடியை தொட்டதாகவும் பதிவிட்டிருந்தார். 
News7 Tamil
மேலும், Green Legacy மூலம், மே அல்லது அக்டோபர் மாதத்திற்குள் 100 கோடி மரங்களை நடவேண்டும் என்பதே இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தியோப்பிய பிரதமரின் இந்த முயற்சிக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு முன்னெடுப்பை எடுத்து நிறைவேற்றலாம் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 
கடந்த 2017ம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை 12 மணி நேரத்திற்குள் நட்டு இந்திய மக்கள் உலக சாதனை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.