காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 15 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய 40 புள்ளி நான்கு 3 டி.எம்.சி நீரில், கர்நாடகா அரசு 9 டி.எம்.சி நீரை வழங்கி உள்ளது.
மேலும் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தக்கோரி, கர்நாடகா மாநில விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபாட்னாவில் காவிரி ஆற்றில் இறங்கி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
credit ns7.tv