தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அமர்நாத் பனிலிங்க யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும், அமர்நாத் செல்லும் பாதைகளில் கன்னிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்த மாநில அரசு, யாத்திரை சென்ற பக்தர்கள், விரைவாக திரும்பவும் அறிவுறுத்தியது.
அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதால், யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர், ஜம்மு, அனந்தநாக் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த பக்தர்கள், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
credit ns7.tv