வியாழன், 8 ஆகஸ்ட், 2019

ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலைமை நாளை தமிழகத்துக்கும் ஏற்படும்: சீமான் August 08, 2019

Image
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலைமை நாளை தமிழகத்துக்கும் ஏற்படும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 
இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், ஜம்மு காஷ்மீரை பிரிப்பதாக அறிவித்த உடனே அங்கு முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளதாக கூறினார். 
மேலும், இந்த நிலை நாளை தமிழகத்துக்கும் நேரும் என தெரிவித்தார். வடமாநிலத்தவர்களை குடியமர்த்தவே ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக சீமான் குற்றம்சாட்டினார். 

credit ns7.tv

Related Posts: