ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பது அப்பட்டமான பொய் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், திருமாவளவன் இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடும் உழைப்பால் அரசியல் வல்லுனராக உயர்ந்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை ரத்து செய்தது அநாகரீகம் என்றும், இது ஜனநாயகம் மீதான கொடூர தாக்குதல் எனவும் குற்றம்சாட்டினார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பது ஒரு அப்பட்டமான பொய் என்றும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்றும், அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்பவில்லை எனவும் திருமாவளவன் கூறினார்.
credit ns7.tv