வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வேலூர் மக்களவை தொகுதியில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்....! August 09, 2019

Image
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விவிபேட் இயந்திரத்தின் வாக்குகள் சரிபார்க்கப்பட்டு முடிவுகள் மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகமும், திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சியின் தீப லட்சுமி உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளும், தனித்தனி அறைகளில் எண்ணப்பட்டன. ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டு, வாக்கு எண்ணும் பணியில், 375 அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் நண்பகல் 12 மணி வரை அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம், முன்னிலை வகித்து வந்தார். எனினும், 12 மணிக்குப் பிறகு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெறத் தொடங்கினார். தொடர்ந்து முன்னிலை வகித்த கதிர் ஆனந்த், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்வானார். 

credit ns7.tv