வியாழன், 15 ஆகஸ்ட், 2019

தமிழகத்திலும் சுதந்திர தின விழா உற்சாகக் கொண்டாட்டம்...! August 15, 2019

Image
73வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வருக்கு, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தமிழக தலைவர்களை நினைவு கூர்ந்தார். தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்திய முதல்வர், இரு மொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். 
நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று புதிதாக 2 மாவட்டங்கள் உருவாக்கப்படும் எனவும் முதல்வர் தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதேபோல், கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் உருவாக்கப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

credit ns7.tv