ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது.
13 நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு 392 ரூபாய் குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 320 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ஒரு கிராம் 40 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 618 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் அதிகரித்து 48 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 48 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
credit ns7.tv