வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு! August 16, 2019

Image
சுதந்திர தின விழாவின் பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் சில அம்சங்களை வரவேற்றுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் பல்வேறு நிலைகளில் மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், பாஜகவை எதிர்த்து பேசி வருபவராக விளங்குகிறார். இந்நிலையில் நாட்டின் 73வது சுதந்திர தினமான நேற்று செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் பல்வேறு அறிவிப்புகளும் அடங்கியுள்ளது. 
இந்நிலையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் கூறப்பட்ட 3 முக்கியமான அம்சங்களை வரவேற்பதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறிய குடும்பமே தேசபக்தி, செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அந்த மூன்று அம்சங்களை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்றிலும் கூட ஜனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற இரண்டு அறிவிப்புகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். கடைநிலை அளவிற்கு எடுத்துச் சென்று மக்கள் இயக்கமாக மாற்றக்கூடிய நூற்றுக்கணக்கான தனியார் அமைப்புகளை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரைவில், ஜனத்தொகை அதிகரிப்பு என்பது நமது எதிர்கால தலைமுறையினருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். அதே போல செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டிற்கு பெருமளவு தொண்டாற்றுவதாகவும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிப்பதாக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

credit ns7.tv