ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைவதற்கு கால அவகாசம் அளிக்க விரும்புவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு அமலில் உள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா மற்றும் பத்திரிகையாளர் அனுராதா பாசின் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்
போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய சூழலில் இந்த வழக்கை விசாரிக்க
எதிர்ப்பு தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், இவ்விஷயத்தில் பாதுகாப்புப் படைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைய கால அவகாசம் கொடுக்க விரும்புவதாகக் குறிப்பிட்டு, அனைத்து வழக்குகளையும் ஒத்திவைத்தனர். மேலும், ஜம்மு காஷ்மீரில் நிலையை படிப்படியாக சீரடைந்து வருவதையும், லேண்ட் லைன் தொலைபேசி இணைப்புகள் செயல்பாட்டுக்கு வந்தள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
credit ns7.tv