வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கு கட்டணம் குறித்து தெளிவுபடுத்தியுள்ள ரிசர்வ் வங்கி! August 15, 2019

ns7.tv
Image
தோல்வியில் முடியும் பரிவர்த்தனைகளை  மாதாந்திர இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையில்  இருந்து கழிக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு  ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகள் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம்  எடுப்பதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல்  இலவசமாகவே கொடுத்துவந்தது. பின்னர், 5  முறை ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம்  கிடையாது, அதன்பிறகு எடுக்கப்பட்டும் ஒவ்வொரு  முறைக்கும் வாடிக்கையாளர் கட்டணம் செலுத்த  வேண்டும் என்று மாற்றப்பட்டது. சில வங்கிகள்  அதை மூன்றாக குறைத்தன. ஒவ்வொரு  வங்கிகளும் கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு  விதமான எண்ணிக்கையில் இலவச  பரிமாற்றங்களை கொடுத்துவந்தன. இந்நிலையில்,  தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ, அல்லது  ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாததால் அந்த  பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தாலோ அது  இலவச பரிவர்த்தனைகளில் இருந்து  கழித்துக்கொள்ளப்படுவதாக ரிசர்வ் வங்கிக்கு  வங்கிக்கு மத்திய வங்கி நோட்டிஸ்  அனுப்பியிருந்தது.
இது குறித்து விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி  “இயந்திர அல்லது தொழில்நுட்ப கோளாறு  காரணமாகவோ, ஏடிஎம் இயந்திரங்களில் பணம்  இல்லாததால் அந்த பரிவர்த்தனை தோல்வியில்  முடிந்தாலோ அல்லது தோல்வியில் முடியும்  பரிவர்த்தனைக்கு வங்கி காரணமாக இருந்தாலோ  அந்த பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களின்  இலவச பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கக்கூடாது”  என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பணமில்லா பரிவர்த்தனைகளான சேமிப்பு விவரத்தை பார்த்தல், செக் புத்தகத்திற்கான வேண்டுகோள், வரி செலுத்துதல், பணம் அனுப்புதல் ஆகியவையும் (கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களில்) இலவச வங்கி பரிவர்த்தனை கணக்குகளின் கீழ் வராது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.