வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

கொச்சி சர்வதேச விமான நிலையத்தை இனி இந்திய கடற்படை தனது பயன்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Image
கொச்சி சர்வதேச விமான நிலையத்தை இனி இந்திய கடற்படை தனது பயன்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கொச்சியில் உள்ள INS Garuda விமானதளத்தின் ஓடுதளம் முக்கியத்துவம் வாய்ந்த பெரியரக விமானங்களான Boeing P8I போன்றவை ஏற, இறங்க இயலாத வண்ணம் சிறியதாக உள்ளது. தற்போது C-130, C-70, AN-32 மற்றும் Dornier வகை சிறிய விமானங்களே இந்த கடற்படை தளத்தை பயன்படுத்தி வருகின்றன.
இதன் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்படும் Boeing P8I விமானங்களை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொச்சி விமான நிலைய இயக்குனர் நாயர் மற்றும்  கொச்சி விமானதள அதிகாரி கேப்டன் சதீஷ் குமார் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன்படி கொச்சி விமான நிலையத்தில் கடற்படை நிர்வாக கட்டடம், விமான பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். 
ஓக்கி புயலின் போது அரபிக் கடலில் தேடுதல் வேட்டை மற்றும் மீட்புப் பணிகளில் Boeing P8I விமானங்கள் அதிகம் கைகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv