சந்திரனை ஆராய்வதற்கான இந்தியாவின் 2வது விண்கலமான சந்திரயான் – 2, குறித்த நாசாவின் புதிய புகைப்படம் சந்திரயான் – 2 திட்டத்தின் விஞ்ஞானிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
முன்னதாக, விக்ரம் லேண்டர் தொடர்பான புகைப்படங்களை, சந்திரனை ஆய்வு செய்து வரும், நாசாவின் லூனார் புலனாய்வு ஆர்பிட்டர், செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15, நவம்பர் 1, 2020 மே ஆகிய தேதிகளில் வெளியிட்டது. இந்த புகைப்படங்களை வைத்து, சென்னையைச் சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியன் நிலவில் விக்ரம் லேண்டர் பாகங்கள் இருப்பதை முதன் முதலில் கண்டறிந்தார். நாசாவும் நிலவின் மேற்பரப்பில் உடைந்து சிதறிக்கிடக்கும் விக்ரம் லேண்டர் பாகங்களை உறுதிபடுத்தியது.
தற்போது, விக்ரம் லேண்டர் பாகங்களை கண்டுபிடித்த சண்முகம் சுப்பிரமணியன், தற்போது “பிரக்யான்” ரோவர் எந்திரத்தை கண்டறிந்துள்ளார். லூனார் புலனாய்வு ஆர்பிட்டர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த சுப்பிரமணியன்,“பிரக்யான்” ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய, உடையாமல் இருப்பதாக” தெரிவித்தார்.
தனது கண்டுபிடிப்பை, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்துக்கும் மின்னஞ்சல் வழியாக சுப்பிரமணியன் தெரியபடுத்தியுள்ளார்.
Chandrayaan2’s Pragyan “ROVER” intact on Moon’s surface & has rolled out few metres from the skeleton Vikram lander whose payloads got disintegrated due to rough landing | More details in below tweets @isro #Chandrayaan2 #VikramLander #PragyanRover (1/4) pic.twitter.com/iKSHntsK1f
— Shan (Shanmuga Subramanian) (@Ramanean) August 1, 2020
சுப்பிரமணியனின் மின்னஞ்சலை உறுதி படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், ” இதுகுறித்த, ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது எதையும் உறுதியாக சொல்ல முடியாது எனவும் தெரிவித்தனர்.
செப்டம்பர் 7 ஆம் நாள் அதிகாலை இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஏதோ ஒரு சிக்னல் மூலம் தான் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை விட்டு வெளியேறி சென்றிருக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சிக்னலை பெற்றிருந்தாலும், பூமிக்கு அதனால் திருப்பி சிக்னலை அனுப்ப இயலாமல் இருந்திருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளர்.
செப்டம்பர்- 7 :
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் (தரையிறங்கும் வாகனம்), செப்டம்பர் 7 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு நிலவில் தென் துருவத்தில் தரையிறங்கத் தொடங்கியது. தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்த பிறகு விண்கலம் தரையிறங்கும் வேகம் படிப்படியாகக் குறைந்தது. அதிகாலை 1.58 மணியளவில் விண்கலத்திலிருந்து எந்த ஒரு சிக்னல்களும் வரவில்லை. நிலவின் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது, இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் சந்திரயான்-2 தொடர்பை இழந்தது, என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்