புதிய கல்விக்கொள்கையை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய கல்விக்கொள்கை 2020 என்ற தலைப்பில் காணொலி கருத்து மேடை நடைபெற்றது. மக்களவை திமுக துணைத்தலைவர் கனிமொழி, கல்வியாளர்கள் வசந்தி தேவி, இராமானுஜம், பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய மு.க.ஸ்டாலின், ஊரடங்கைப் பயன்படுத்தி மறைமுகமாக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழக அரசு மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு துணை போகக் கூடாது என்று கூறிய மு.க.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபடும் எனக் கூறினார்.