மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்கும் விதமாக புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், புதிய கல்விக்கொள்கை 2020 என்ற தலைப்பில் காணொலி கருத்துமேடை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்கும் விதமாக புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
சமஸ்கிருதம் எதிர்காலத்திற்கான வாழ்வியலை கற்றுத்தருமா? என்பதை விளக்க வேண்டும் என்றும், அடுத்த தலைமுறையை தயார்செய்யும் விதமாக கல்விக்கொள்கை அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்