ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

சென்னையில் குறைகிறது; பிற மாவட்டங்களில் கூடுகிறது: கொரோனா ரிப்போர்ட்

 கொரோனா பாதிப்பு, தலைநகர் சென்னையில் குறைந்து வரும் நிலையில், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் கொரோனா தொற்று 5,883 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை 986” என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனா உயிரிழப்பு: தமிழகத்தில் இன்று ஒரே நாளில், கொரோனாவால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ,  மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனைகள்:  தமிழகத்தில் இன்று மட்டும் 65,872 பேருக்கு  கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  இதன் மூலம் தமிழகத்தில்,  30,41,529 பேருக்கு இதுவரை  கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது.

 

கொரோனா தொற்று தினசரி வளர்ச்சி விகிதம்                              கொரோனா தொற்று தினசரி வளர்ச்சி விகிதம்

 

குணமடைவோர் எண்ணிக்கை:  இன்று மட்டும் 5,043-பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 5,883 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை  2,32,618-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது, நோய்த் தொற்றால் பாதித்தவர்களில்  79.96  சத விகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம், தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  53,481 ஆக உள்ளது.

சென்னை நிலவரம்:    சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,124 ஆக உயர்ந்தது. சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெரும்  ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 11,734 ஆக உள்ளது.

மற்ற மாவட்டங்களின் நிலவரம்:

 

 

தேனி-452

செங்கல்பட்டு-425

திருவள்ளூர்- 391

காஞ்சிபுரம்- 284

விருதுநகர்-246

தூத்துக்குடி-247

தஞ்சை-227

தென்காசி-203

குமரி-197

கோவை – 183

கடலூர்- 193

வேலூர் -155

திண்டுக்கல்-138

ராணிப்பேட்டை-138

நெல்லை-126

தி.மலை- 121

ராமநாதபுரம்- 55

சிவகங்கை – 55

 

Related Posts: