தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 24 பேரும் அடக்கம்.
அதிர்ச்சியூட்டும் கொரோனா உயிரிழப்புகள்:
தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,690 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை - 24
செங்கல்பட்டு -8
திருவண்ணாமலை - 6
திருவள்ளூர் - 6
தூத்துக்குடி - 6
சேலம் - 6
வேலூர் - 5
கோவை - 5
காஞ்சிபுரம் - 5
கன்னியாகுமரி - 5
கிருஷ்ணகிரி - 4
தேனி - 4
தென்காசி - 4
திருநெல்வேலி - 4
தஞ்சாவூர் - 3
கடலூர் - 3
புதுக்கோட்டை - 3
கள்ளக்குறிச்சி - 2
திருப்பூர் - 2
விழுப்புரம் - 2
விருதுநகர் - 2
மதுரை - 2
அரியலூர் -1
ஈரோடு - 1
கரூர் - 1
நீலகிரி - 1
ராமநாதபுரம் -1
ராணிப்பேட்டை - 1
சிவகங்கை - 1
திருப்பத்தூர் - 1
அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,488 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 2,27,575 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 55,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 2,85,024 பேரில், 1,72,334 பேர் ஆண்கள், /1,12,663 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 27 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 30,88,066 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 67,352 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு:
சென்னையில் 984 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,07,109 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 99 நாட்களுக்கு பிறகு சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,000க்கு கீழ் குறைந்துள்ளது. கடைசியாக ஏப்ரல் 30ம் தேதி பாதிப்பு எண்ணிகை 1,000-க்கு குறைவாக கண்டறியப்பட்டுள்ளது!
மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:
சென்னை- 984, திருவள்ளூர்- 388, தேனி- 351, செங்கல்பட்டு- 319, ராணிப்பேட்டை- 253, தி.மலை - 252, கோவை - 228, தஞ்சை-217, கடலூர்- 212, நெல்லை- 200, தூத்துக்குடி-195, குமரி - 187, புதுக்கோட்டை- 173, சேலம்-168, காஞ்சிபுரம்- 166, வேலூர் -158, க.குறிச்சி-139, திண்டுக்கல்-134, தென்காசி-117, மதுரை-109, திருச்சி-105, விருதுநகர்-101, நாகை-78, விழுப்புரம்-73, பெரம்பலூர்-69, ஈரோடு-67, திருப்பத்தூர்-66, சிவகங்கை-64, அரியலூர்-51, கிருஷ்ணகிரி- 46, திருவாரூர்- 44, ராமநாதபுரம்- 43, நாமக்கல்- 34, திருப்பூர்- 31, கரூர்-26, தர்மபுரி - 16, நீலகிரி - 13
ஆகஸ்ட் மாத பாதிப்பு விவரம்:
ஆகஸ்ட் 1 - 2,51,738
ஆகஸ்ட் 2 - 2,57,613
ஆகஸ்ட் 3 - 2,63,222
ஆகஸ்ட் 4 - 2,68,285
ஆகஸ்ட் 5 - 2,73,460
ஆகஸ்ட் 6 - 2,79,144
ஆகஸ்ட் 7 - 2,85,024