1885ம் ஆண்டு: அயோத்தியில் ராமர் ஆலயம் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும், எனவே, அந்த இடத்தில் மீண்டும் ராமர் ஆலயம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரி மகந்த் ரகுபர் தாஸ் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்படுகிறது.
➤ 1949ம் ஆண்டு: பாபர் மசூதியின் மையப் பகுதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதை அடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானதால், அந்த கட்டடம் மூடப்பட்டது. இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
➤ 1959ம் ஆண்டு: சர்ச்சைக்குரிய கட்டடம் உள்ள பகுதி தங்களுக்கு சொந்தமானது என நிர்மோகி அக்காரா நீதிமன்றத்தில் உரிமை கோரியது
➤ 1961ம் ஆண்டு: சர்ச்சைக்குரிய கட்டடம் உள்ள பகுதி தங்களுக்கு சொந்தமானது என சன்னி மத்திய வக்ஃப் வாரியம் நீதிமன்றத்தில் உரிமை கோரியது
➤ 1984ம் ஆண்டு: அயோத்தியில் ராமர் ஆலயம் அமைப்பதற்கான பிரச்சாரத்தை விஸ்வ இந்து பரிஷத் தொடங்கியது.
➤ 1990ம் ஆண்டு: அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ரத யாத்திரையை மேற்கொண்டார்
➤ 1992, டிசம்பர் 6ம் தேதி: பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது
➤ ஏப்ரல் 2002ம் ஆண்டு: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது
➤ 2003ம் ஆண்டு: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, ஆய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை, மசூதியின் கீழ் கோயில் உள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது
➤ 2010ம் ஆண்டு: அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில், நிலத்தை மூன்றாக பிரித்து, அதில் ஒரு பகுதி அகில பாரதிய இந்து மகாசபாவுக்கும், ஒரு பகுதி நிர்மோகி அகாராவுக்கும், ஒரு பகுதி, சன்னி வக்ஃப் வாரியத்திற்கும் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
➤ 2011ம் ஆண்டு: அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது
➤ 2017ம் ஆண்டு: இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது
➤ 2019 ஜனவரி 10ம் தேதி: 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது
➤ 2019 அக்டோபர் 16ம் தேதி: 40 நாட்கள் தொடர் விசாரணையை அடுத்து விசாரணை நிறைவுற்றதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்
➤ 2019 நவம்பர் 9ம் தேதி: சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் ஆலயம் அமைக்க ராம ஜென்மபூமி நியாசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு