டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். காற்று மாசுபாடு காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பனி மூட்டமாக காணப்பட்டது.
குறைந்தபட்ச வெப்பம் 13.7 டிகிரி செல்ஷியசாகவும், அதிகபட்ச வெப்பம் 22 செல்ஷியசாகவும் பதிவாகியுள்ளது. மோசமான இந்த வானிலை காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளானதோடு, கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தில்ஷாத் கார்டன், ஐ.டி.ஓ, மந்திர் மார்க், ஆனந்த் விகார் மற்றும் ஆர்.கே.புரம் உள்ளிட்ட இடங்களில் நைட்ரஜன் ஆக்சைடு அளவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயத்தில், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள ஆர்.கே.புரம் பகுதியில் நைட்ஜன் ஆக்சைடு அளவும் அதிகரித்துள்ளளதாக டெல்லி வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எந்தவித இடையூறும் இன்றி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.