பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை குறைத்தால், இந்தியாவுக்கு வழங்கி வரும் சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக கருத்து கூறியுள்ள இந்தியாவுக்கான ஈரான் துணைத்தூதர், சபஹார் துறைமுக விரிவாக்கம் மற்றும் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறிய இந்தியாவின் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். இதுக்குறித்து இந்தியா விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக இந்தியாவுக்கான இந்திய துணைத்தூதர் மசூத் ரெஜ்வானியன் ரஹாஜி கூறுகையில், சபஹார் துறைமுகம் விரிவாக்கம் மற்றும் இணைப்பு திட்டத்திற்கான முதலீடு செய்வதாக கூறிய இந்தியாவின் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாதது வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக இந்தியா விரிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிசக்தி பொருள் விநியோகத்தில், இந்தியாவுக்கு ஈரான் நம்பகமான நாடாக உள்ளது. விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு, பெட்ரோலிய பொருட்களை கட்டுபடியான விலையில் விநியோகம் செய்து வருகிறோம். ஈரானுக்கு மாற்றாக சவுதி, ரஷ்யா, ஈராக் மற்றும் அமெரிக்காவிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்தால், இந்தியாவுக்கு செலவு அதிகரிக்கும். இந்தியாவிற்கு வழங்கும் சலுகைகளை ஈரான் ரத்து செய்யும். இவ்வாறு அவர் கூறினார்