புதன், 4 ஜூலை, 2018

வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை! July 4, 2018

பொய் தகவல்கள் மற்றும் வெறுப்பு உணர்வை தூண்டும் வகையிலான விஷயங்களை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, சமூக ஊடகமான, 'வாட்ஸ் ஆப்'பை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தை திருடர்கள் என்ற சந்தேகத்தில் பலர் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களால், அண்மையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ் ஆப் செயலியில் பரப்பப்படும் வதந்திகளால் பல்வேறு மாநிலங்களில் படுகொலைகள் நடந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ் ஆப் நிறுவனம், உரிய தொழிற்நுட்பங்கள் மூலம் உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.