திங்கள், 9 ஜூலை, 2018

உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: உச்சநிதிமன்றம் July 9, 2018

உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளின் நிகழ்வுகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை வெளிப்படைத் தன்மைக்காக நேரலை செய்யலாம் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் பரிந்துரைத்தார். பரிசோதனை முறையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நேரலை செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தலாம் என்றும் அவர் கூறினார். 

இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இது தொடர்பான முழுமையான வழிமுறைகளை தாக்கல் செய்யுமாறு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Posts: