தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
அனைத்து மாநிலங்களும் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தி, ஜூலை 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், மே 29ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து இறுதி நாளான இன்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
மசோதாவில் யார் யாரிடம் விசாரணை நடத்தலாம் என்பதற்கான வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளாகும் முதல்வர், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரையும் விசாரிக்கும் வகையில் மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.