உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள 975 சி.சி. திறன் கொண்ட புதிய மாடலை இந்தியர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. அந்த நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களுமே, அடிப்படையில் க்ரூஸர் ரகத்தை சேர்ந்தவையாக இருக்கின்றன.
இந்நிலையில் சூப்பர் ஸ்போர்ட்ஸ் ரக பைக் தயாரிப்பில் களம் இறங்க இருக்கிறது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். அத்துடன், 500 சி.சி. முதல் 1,250 சி.சி. வரை திறன் கொண்ட மூன்று புதிய இருசக்கர வாகனங்களை வரும் 2020-ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அவற்றின் மாடல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு புகழ் பெற்ற நிலையில், அதில் Street Fighter 975 சி.சி. பைக்கை இந்தியாவைச் சேர்ந்த Chetaan Shedjale வடிவமைத்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு, Chetaan Shedjale இந்த இருசக்கர வாகன மாடலை வடிவமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.