கேரளாவில் பாலக்காடு அருகே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அய்யபுரம் உள்ளிட்ட 4 இடங்களில், நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களை தன்னார்வலர்கள் நிர்வகித்து வரும் நிலையில், போதிய உணவு, குடிநீரின்றி, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தவித்து வருகின்றனர்.
மேலும், அணிந்துள்ள உடையை தவிர, வீட்டில் இருந்த அனைத்தையும் தாங்கள் இழந்துவிட்டதாகவும், இனி வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும், அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். எனவே, உணவுப் பொருட்கள், ஆடைகள், அல்லது பண உதவி போன்றவை கிடைத்தால், தங்களின் துயரம் ஓரளவு தீரும் என்று கண்ணீருடன் வேண்டுகின்றனர் பாலக்காடு வாழ் தமிழர்கள்.