ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம். August 12, 2018

Image

வீட்டிலேயே சுகபிரசவம் பார்க்க இலவச பயிற்சி என விளம்பரம் செய்த விவகாரத்தில், கோவையில் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 

கோவை புதூரில் செயல்பட்டு வந்த நிஷ்டை நிறுவன தலைவர் ஹீலர் பாஸ்கர், நிறுவன மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோரை கடந்த 2ம் தேதி குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். மருத்துவம் பயிலாமல் நோய்களை சரிபடுத்த முடியும் என கூறி, மோசடி மற்றும் நன்கொடை பெற்று நிதிமோசடி செய்ததாக இருவர் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில்  ஜாமீன் கேட்டு  தாக்கல் செய்யப்பட்ட மனு, கோவை 7வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரும் 30 நாட்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.