ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

​திமுகவின் தலைவராகிறாரா மு.க.ஸ்டாலின்? August 12, 2018

Image

திமுக தலைமைச் செயற்குழுவின் அவசரக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து, வரும் 14-ஆம் தேதி கட்சியின் தலைமைச்  அவசர செயற்குழு கூட்டம் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இல்லாத நடைமுறையாக பொதுக்குழு உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டுமென்பதால் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக 2-ஆம் கட்ட நிர்வாகி ஒருவரும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், திமுக பொதுக்குழு கூட்டத்தை வரும் செப்டம்பர் முதல் வாரம் அல்லது திமுக முப்பெரும் விழாவின்போது நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.