ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காப்பீடு, செப்டம்பர் 1ம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் முதல் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில், ரயில் பயணிகளுக்கு இலவச காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ரயில் பயண விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயும், ஊனமுற்றவர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் கிடைக்க, அந்த காப்பீடானது வகை செய்தது.
இந்நிலையில், இந்த காப்பீடு செப்டம்பர் முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, காப்பீடு வேண்டும் அல்லது வேண்டாம் என்ற வாய்ப்புகள் கொடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.