போடி அருகே ஒன்றரை நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயரை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுமியின் பெயர் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் துரைராஜபுரம் காலனியை சேர்ந்த கனகராஜ்-வனிதா தம்பதியின் மகள் விகாசினி. 5 வயதான விகாசினி, 1 நிமிடம் 27.5 நொடிகளில் 160 மூலிகைகளின் பெயரை உலக சாதனை அமைப்பு முன்னிலையில் மனப்பாடமாக ஒப்புவித்தார்.
இதற்கு முன்பு 3 நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயர் ஒப்புவித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதைவிட குறைந்த நிமிடத்தில் மாணவி ஒப்புவித்துள்ளது உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.