வியாழன், 2 ஆகஸ்ட், 2018

​"சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது" - மு.க.ஸ்டாலின் August 2, 2018

Image

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அதிமுக அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது” என்று அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது வியப்பளிப்பதாக கூறியுள்ளார். உயர்நீதிமன்றத்தின்  மேற்பார்வையில் நடைபெறும் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றப் போகிறோம் என்று தெரிவிப்பது, அதிமுக அரசின் படு மோசமான நிர்வாக தோல்வியைப் படம் பிடித்துக் காட்டுவதாக விமர்சித்துள்ளார். 

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு அதிமுக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்தாலும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை, ஐ.ஜி. பொன்மாணிக்கவேலு தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கைது செய்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கவிதா கைது செய்யப்பட்டவுடன், ஐ.ஜி. மீதே நம்பிக்கையில்லை என்றும், ஒரு வருடமாக விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் அதிமுக அரசு தெரிவித்திருப்பதில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

source:
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/2/8/2018/mk-stalin-about-silaikadathal-case-hand-overed-cbi