தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய உணவிலும் கட்டாயம் இடம் பெற்றிருப்பது ரசம். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் போன்றவைகளையும் தாண்டி, அதில் சேர்க்கப்படும் புளி கரைசல் நம் உடலுக்கு மிகவும் நல்லது.
ரசத்தின் நன்மைகள்:
1. செரிமானம்:
மதிய உணவுடன் சேர்த்து ரசம் சாப்பிடுவது செரிமானத்தை தூண்டுகிறது. அது மட்டுமல்லாமல், ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு மற்றும் தக்காளி செரிமான கோளாறுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
2. அதிக சத்துக்கள்:
ரசம் குடிப்பதன் மூலம், நம் உடலுக்கு வைட்டமின் A, B3, C போன்ற சத்துக்கள் மட்டுமல்லாமல் சிங்க் (ZINC), இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் இருக்கிறது. அதனால், முடிந்த வரை ரசத்தை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3.வாயு பிரச்சனை:
ரசம் சாப்பிடுவதன் மூலம் வாயு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
4. நோய் எதிர்ப்பு சக்தி:
ரசத்தில் சேர்க்கப்படும் மஞ்சள், மிளகு மற்றும் சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கசெய்கிறது.