வெள்ளி, 31 மே, 2019

தீவிரமடையும் சாக்பீஸ் தயாரிப்பு! May 31, 2019

பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி தருமபுரி அருகே சாக்பீஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  கோடைகாலம் முடிந்து வருகின்ற ஜீன் மாதம் 3 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இருக்கின்றன. இதையொட்டி நோட்டு புத்தகங்கள், அட்டைகள் மற்றும் ஸ்கூல் பேக்குகள் விற்பனை சூடுபிடித்து வருகின்றது. இந்நிலையில், தருமபுரி, வெள்ளிசந்தை, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிசை தொழிலாக...

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு! May 31, 2019

புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ஜூன் 3-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துகொண்டே இருக்கிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் எதிர்பார்த்த வகையில் குறைந்தபாடில்லை.  இதனால்,...

சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு! May 31, 2019

சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு, இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர், இதனை தெரிவித்தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளைப் போன்று சித்தா,...

அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு? May 31, 2019

1. நிதியமைச்சர் - நிர்மலா சீதாராமன்2. பாதுகாப்புத்துறை - ராஜ்நாத் சிங்3. உள்துறை  - அமித்ஷா4. வெளியுறவுத்துறை - ஜெய்சங்கர்5. ரயில்வே , வர்த்தகம் மற்றும் தொழில் - பியூஸ் கோயல்6. சாலை போக்குவரத்து - நிதின் கட்கரி7. சட்டம், தொலைத்தொடர்பு, மின்னணு & தகவல் தொழில்நுட்பம் - ரவிசங்கர் பிரசாத்8. சிறுபான்மையினர் நலன்  - முக்தர் அப்பாஸ் நக்வி9. உர மற்றும் இரசாயனம் - சதானந்த கவுடா10. நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்...

Cancel செய்யப்பட்ட உணவுப்பொருட்களை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து மகிழும் டெலிவரி பாய்...! May 31, 2019

Zomato டெலிவரி பாய் ஒருவர், Cancel செய்யப்பட்ட உணவுப்பொருட்களை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து உதவுவது அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் பதிக்ரித் சஹா. இவர், கொல்கத்தாவில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் இவரிடம் பணம் கேட்டபோது, பணம் தர மறுத்து அவனை அடித்து துரத்தியுள்ளார். பின்னர் தன் தவறை உணர்ந்த...

உளவு பார்த்த விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! May 31, 2019

உளவு பார்த்து நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததற்காக பாகிஸ்தான் ராணுவத்தில் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு அதிகாரிகளுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜாவீத் பிஜ்வா இக்பால், உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ராணுவ கோர்டில்...

வியாழன், 30 மே, 2019

ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு! May 30, 2019

ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார்.  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR Congress கட்சி. இதையடுத்து, விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து! May 30, 2019

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விநாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 10 மணி அளவில் படிப்படியாக...

கம்பம் பகுதியில், வீசிய பலத்த சூறைக்காற்றால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதம்! May 30, 2019

கம்பம் பகுதியில், நேற்று மாலை வீசிய பலத்த சூறை காற்றில் சிக்கி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின.  தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில், பல ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வாழை மரங்களில் குலை தள்ளியிருந்த நிலையில், நேற்று சூறைக்காற்று வீசியது. இதில், ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.  இதனால்,...

இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Pray_for_Neasamani ஹேஷ்டேக்! May 29, 2019

சமூக வலைதளங்களில் #Pray_for_Neasamani ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரண்டாகி வருகிறது. பொதுவாக சமூக வலைதளங்ளில் எப்போது என்ன ட்ரெண்டாகும் என்பதை கணிக்கவே முடியாத ஒன்றாகும், அதே போல் சமூக வலைதள வாசிகளையும் புரிந்து கொள்ள முடியாது. சமிபகாலமாகவே யார் சர்ச்சையில் சிக்கினாலும், அவர்களை வருத்தெடுத்து ட்ரண்டாக்கி வருவதை வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.  குறிப்பாக...

செவ்வாய், 28 மே, 2019

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்”- ராமதாசை விமர்சித்து முரசொலியில் கட்டுரை...! May 28, 2019

மக்களவைத் தேர்தல் படு தோல்வியிலும் பெருமிதம் பேசுவதில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நிகர் ராமதாசேதான் என முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைதான் ஏற்படுத்தியதே தவிர எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்தை விமர்சித்து  “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்” என்ற தலைப்பில்...

இந்த வார இறுதிக்குள் 2 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்: தமிழக அரசு May 28, 2019

காவிரியில் இந்த வார இறுதிக்குள் 2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.  டெல்லியில் மத்திய நீர் ஆணைய அலுவலகத்தில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஆணையர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழகம், கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதனை அடுத்து பிப்ரவரி முதல் மே மாதம்...

2000 ஆண்டுக்குப் பின் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு! May 28, 2019

2000 ஆண்டுக்குப் பின் அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கி உள்ளது.   அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில், 2000ம் ஆண்டுக்கு பிறகு B.E முடித்து ஓரிரு பாடங்கள் அரியர் இருப்பதால் பட்டத்தை முடிக்க முடியாமல் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மீண்டும்  தேர்வு எழுத கடைசி வாய்ப்பு...

கார் நிறுத்தும் இடமாக மாறியுள்ள வைகை ஆறு...! அதிர்ச்சியில் மதுரைவாசிகள்...! May 28, 2019

மதுரை வைகை ஆற்றில் திடீரென கார் நிறுத்துமிடம் அமைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஆறாக விளங்கக்கூடிய மதுரை வைகை ஆறு கடந்த சில ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர் வைகை ஆற்றில் மைய மண்டபம் பகுதி அமைந்துள்ள கீழதோப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்தி வருமானம் ஈட்டி வருவதாக...

72 ஆண்டுகளுக்கு பிறகு மின் இணைப்பு பெற்ற பழங்குடியின மக்களின் குடியிருப்பு...! May 28, 2019

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள குடியிருப்பிற்கு 72 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தில் அகஸ்தியர் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு, பெரிய மயிலாறு காணிக்குடியிருப்பு, இஞ்சிக்குளி, சேர்வலாறு...

திங்கள், 27 மே, 2019

குடிநீர் கேட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! May 27, 2019

குடிநீர் கேட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகம்  இருப்பதாலும், சரிவர மழை பெய்யாததாலும் குடிநீருக்காக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் குடிநீருக்காக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருத்தணி...

மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் தொடரும் காட்டுத் தீ! May 27, 2019

சங்கரன்கோவில் அருகே மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். பொதுவாக கோடைகாலம் தொடங்கினாலே மலைகள் மற்றும் காடுகள் நிறைந்த பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் காட்டுத்தீ பரவுவது என்பது வாடிக்கையான ஒன்றாகும். பல நேரங்களில் இது போன்ற காட்டு தீ ஏற்படுகின்ற பொழுது பெரிதும் பொதுமக்களை பாதிக்கும்...

22 தொகுதி திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு எப்போது? May 27, 2019

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் நாளை பதவியேற்கவுள்ளனர். மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவையில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை திமுகவும், 9 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றின. இதனால், புதிதாக தேர்வாகியுள்ள 22 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெயர்களும், தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.  இந்த...

ஜார்கண்ட், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா! May 27, 2019

தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஒரே நாளில் ஜார்கண்ட், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்வர்கள் ராஜினாமா செய்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014ஐ போலவே 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதே நேரத்தில் 2014ஐ காட்டிலும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக. மொத்தமுள்ள 542 தொகுதிகளில்...

தோல்விக்கு லல்லுவும் அவரது மகனுமே பொறுப்பு - தலைமைக்கு எதிராக உள்கட்சி எம்.எல்.ஏ பாய்ச்சல்! May 27, 2019

ராஷ்டிரிய ஜனதா தளம் பீகாரில் பெற்ற மோசமான தோல்விக்கு கட்சியின் தலைவரான லல்லு பிரசாத் யாதவும், அவரது மகனுமே பொறுப்பு என அக்கட்சியில் எம்.எல்.ஏ ஒருவரே கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளன. அந்த வகையில் பீகாரில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா...

அதிமுகவில் இருந்து கொண்டு நோட்டாவுக்கு வாக்களித்த நடிகர் ஆனந்த் ராஜ்! May 27, 2019

தற்போது வரை அதிமுக தொண்டனாக இருப்பதாகவும், விரைவில் அரசியல் பணியை தொடங்க உள்ளதாகவும்  நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்த் ராஜ், தேர்தலின் போது இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தான் கூறியதை சுட்டிக்காட்டினார். தான் நோட்டாவுக்கு வாக்களித்ததாகவும், நோட்டாவிற்கு வாக்களித்த அனைவருக்கும்...

ஞாயிறு, 26 மே, 2019

கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ஊழியர்களே பல லட்சம் மோசடி! May 25, 2019

கொடைக்கானல் நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ரூ 17 லட்சம் மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது 2 பேருக்கு வலைவீச்சு  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இதில் ரிச்சர்ட் என்பவர் காசாளராகவும்  சரவணகுமார் மற்றும் சுசீந்திரன் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தனர். மேலும் சிவக்குமார் விஜயகாந்த் ஆகியோரும் பணிபுரிந்து...

புழல் ஏரியில் நீர் இருப்பு குறைந்ததால் சென்னையில் ஏற்பட இருக்கும் கடும் குடிநீர் தட்டுப்பாடு! May 26, 2019

புழல் ஏரியில் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததையடுத்து சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கமும், போதிய மழையின்மை காரணமாகவும் தமிழத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களான சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் வறண்டு...

குன்னூரில் தொடங்கிய 61-வது பழக்கண்காட்சி... ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள்...! May 26, 2019

குன்னூரில் தொடங்கிய 61-வது பழக்கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். உதகையில் மலர் கண்காட்சி நிறைவு பெற்ற நிலையில், கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியான 61வது இருதின பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கியது. சுமார் ஒன்றரை டன் அளவிலான பழங்களை கொண்டு அலங்கரித்து வைத்திருந்த ராட்சத வண்ணத்துப்பூச்சி, அசோக சின்னம், மயில்,...

சனி, 25 மே, 2019

மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் மீது கடும் தாக்குதல்! May 25, 2019

மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மத்தியப்பிரதேசம் மாநிலம் சியோனியில் ஒரு பெண் உட்பட 3 பேர் ஆட்டோவில் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக வதந்தி கிளம்பியது. இதனை அடுத்து ஸ்ரீராம்சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆண்களை மரத்தில் கட்டி...

ராகுல் காந்தியின் ராஜினாமாவை நிராகரித்த காங்கிரஸ் காரிய கமிட்டி குழு! May 25, 2019

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்த நிலையில், அதனை ஏற்க கட்சியின் உயர்மட்டக் குழுவான காரிய கமிட்டி மறுத்துவிட்டது. தேர்தல் தோல்வி குறித்து ஆராய, காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டிக்கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்றது. கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்...

தமிழக மக்கள் பாஜகவை அந்நிய கட்சியாக பார்க்கிறார்கள்: டி.கே.ரங்கராஜன் May 25, 2019

மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரிவினை செய்யும் கொள்கைகளை, பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் தவிர்க்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.   தாம்பரத்தில் நடைபெற்ற சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2-வது முறை ஆட்சி அமைக்க உள்ள பாஜக, எப்படி செயல்பட போகிறது என்பதை, பொறுத்திருந்து...

குற்றாலத்தில் சீசன் கால அரிய வகை பழவகைகள் விற்பனை தொடங்கியது! May 25, 2019

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அரிய வகை மூலிகை மருத்துவ குணம் கொண்ட பழங்களின் விற்பனை துவங்கியுள்ளது.   குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட்  சீசன் காலங்களில் அரிய வகை பழவகைகளான ரம்புட்டான், துரியன், பன்னீர் கொய்யா மற்றும் மங்குஸ்தான் முட்டை பழம் போன்றவைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில்  இவ்வகை பழங்களின் விற்பனை, முன்கூட்டியே...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பாசுரம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு! May 25, 2019

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பாசுரம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் கைகலப்பில் ஈடுபட்டது பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது.  இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நடைபெறும் சுவாமி வீதியுலாவின் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவு ஐயங்கார்கள்...

தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜினாமா செய்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள்! May 24, 2019

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் தங்களது பதவியிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவகளில் 2014ஆம் ஆண்டை போலவே மிகவும் மோசமான நிலையை காங்கிரஸ் கட்சி இந்த முறையும் எட்டியுள்ளது. சுமார் 15 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒற்றை தொகுதியை கூட அக்கட்சி கைப்பற்ற இயலாமல் அவல நிலைக்கு சென்றுள்ளது. இதிலும் கடந்த...

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏவை 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்த மமதா பானர்ஜி! May 25, 2019

Authors ஒரு கட்டத்தில் மமதா பானர்ஜியின் வலதுகரமாக திகழ்ந்த வரும், நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் பாஜகவிற்கு மகத்தான வெற்றியை தேடித்தந்ததில் முக்கிய பங்காற்றியவருமான முகுல்ராயின் மகன், சுப்ரன்ஷூ ராயை 6 ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவில் மேற்குவங்காளத்தில் இரண்டாவது...