சனி, 4 மே, 2019

பிரதமர் மோடியை இன்டர்வியூ செய்த அக்சய்குமார்; மரண கலாய் செய்து ட்வீட் போட்ட சித்தார்த்! May 04, 2019

source ns7.tv
Image
நடிகர் சித்தார்த் சமூகவலைதளங்களில் தீவிரமாக அரசியல் பேசி இயங்கிவரும் நடிகராவார். பிரதமர் மோடி குறித்த பல விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக மக்கள் முன் வைப்பார். 
அப்படியாக தற்போது சித்தார்த் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், டொனால்ட் ட்ரம்ப்பை மென்சன் செய்து பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது, "ஹே டொனால்ட் ட்ரம்ப் விரைவில் நீங்கள் தேர்தலை சந்திக்க உள்ளீர்கள். தேர்தல் சமயத்தில் உங்களை ஒரு நேர்க்காணல் எடுக்க வேண்டும். என்னிடம் நீங்கள் எப்படி பழம் சாப்பிடுவீர்கள், உங்களுடைய தூக்கம், பழக்கவழக்கம் மற்றும் உங்களுடைய பர்சனாலிட்டி குறித்து பகிர்ந்து கொள்ளும் படியான முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. என்னிடம் இந்தியா பாஸ்போர்ட்டும் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 
இதையடுத்து, நடிகர் சித்தார்த் மறைமுகமாக நடிகர் அக்சய்குமார், பிரதமர் மோடியை சமீபத்தில் எடுத்த நேர்க்காணலைத் தான் கலாய்க்கிறார் என்பதை புரிந்து கொண்டு, பிரதமர் மோடி மற்றும் அக்சய்குமாரை அதில் டேக் செய்யத் தொடங்கியுள்ளனர் சமூகவலைதளவாசிகள். பிரதமர் மோடியை சமீபத்தில் அக்சய் குமார் எடுத்த பேட்டியில் அரசியல் குறித்த ஒரு கேள்வி கூட அவர் கேட்கவில்லை. மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர் குறித்த கேள்விகளையே முழுக்க முழுக்க கேட்டிருந்தார். இதைத்தான் தற்போது சித்தார்த் கலாய்க்கும் வகையில் சர்காசமாக ட்வீட் செய்துள்ளார். 
மேலும் நடந்துவரும், நாடாளுமன்றத் தேர்தலில், நடிகர் அக்சய்குமார் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர் என்ற காரணத்தால் வாக்களிக்கவில்லை. இதையடுத்து அவரை இந்தியர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இதனையும் கலாய்க்கும் விதமாக, நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டின் இறுதியில் என்னிடம் இந்தியா பாஸ்போர்ட் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்

Related Posts: