சனி, 4 மே, 2019

கைதிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்திய 9 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றி டி.ஐ.ஜி உத்தரவு...! May 04, 2019


Image
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியதாக ஒன்பது கைதிகளை வேறு சிறைக்கு மாற்றி சிறைத்துறை டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 23ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, சிலர் கட்டடத்தின் முதல் தளத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சிறையில் மோதலை ஏற்படுத்தி போராட்டத்தை தூண்டியதாக அருண், பெரியண்ணா, கண்ணன் உள்ளிட்ட ஒன்பது கைதிகள், மதுரை மத்திய சிறையில் இருந்து வெவ்வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒன்பது கைதிகளும் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த சிறைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்
source ns7.tv

Related Posts: