பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை, மருத்துவ படிப்புகளில் முறையாக அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக, ஏற்கனவே உள்ள இடங்களுடன் கூடுதலாக 25 சதவீத மருத்துவ இடங்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது பிரிவு மற்றும் பிற பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில், கூடுதல் இடங்களை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜூன் 15ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..