சனி, 8 ஜூன், 2019

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து 600கீமி மனித சங்கிலி போராட்டம் - வைகோ அறிவிப்பு. June 08, 2019

Image

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 12ம் தேதி, சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையற்றது எனக் கூறினார். தமிழக ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலர் உயிரிழக்க காரணமான தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், கோதாவரியில் இருந்து காவிரிக்கு நீர் வரும் என்பதெல்லாம் கானல் நீராகும் என்றும், தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயல்கிறது என குறிப்பிட்டார். 
எனவே இதனை கண்டித்து மதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்டமான மனித சங்கிலி  வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறினார்.

Related Posts: