
மழை பொய்த்தாலும், ட்ராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றி மல்லிகைச் செடிகளை வளர்ப்பதாக கூறும் விவசாயிகள், போதுமான விலை கிடைக்காமல் நஷ்டம் அடைவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
வாசனை திரவிய உற்பத்தியில் பெரும் பங்கு உசிலம்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை பூ-க்களுக்கு இருக்கும் நிலையில், இந்தப் பகுதியில் ஒரு நறுமண தொழிற்சாலை கூட இல்லை என்று ஆதங்கப்படும் விவசாயிகள், உசிலம்பட்டியில் நறுமண தொழிற்சாலையை அமைக்க அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உசிலம்பட்டி பகுதியில் நறுமண தொழிற்சாலை அமைப்பதோடு, பூக்களைப் பதப்படுத்தி வைக்கும் கிட்டங்கி உடனடியாக அமைத்து தர வேண்டும் என மல்லிகைப் பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.