ஆன்லைனில் பண மோசடி செய்வதில் தமிழக மக்கள் தான் அதிகளவு குறிவைக்கப்படுவதாக நிதி அமைச்சகத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்க பேங்க் அக்கௌண்ட் நம்பர் என்ன? உங்க ஏடிஎம் கார்டு நம்பர் சொல்லுங்க, ஏடிஎம் பின் நம்பர் சொல்லுங்க, வெரிஃபை பண்ணணும் - என்று பேங்க் ஆபீஃசர் போல ஃபோன் செய்து ஏமாற்றும் செயலை ஒருமுறையாவது நாம் அனுபவித்திருப்போம்...இதுபோன்ற மோசடிகளால் ஏமாறுவதில் இந்தியாவிலேயே தமிழர்கள் தான் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவலை வெளியிட்டுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
வங்கிக் கணக்கில் இருந்து காசை வாரிச் சுருட்டும் கும்பலிடம் இழக்கும், பணத்தின் அடிப்படையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இன்று நேற்றல்ல கடந்த 3 ஆண்டுகளில் இழந்த தொகையின் அடிப்படையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதேசமயம், இந்த மோசடி தொடர்பாக பதியப்படும் வழக்குகளின் அடிப்படையில் தமிழகம் தேசிய அளவில் 3வது இடத்தில் இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் ஏடிஎம், கிரெடிட் கார்டு, போன் மூலமாக மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு
2016-17 ம் ஆண்டு - 4 கோடி ரூபாய்
2017-18 ம் ஆண்டு - 41 கோடி ரூபாய்
2018-19 ம் ஆண்டு - 11 கோடி ரூபாய்
2017-18 ம் ஆண்டு - 41 கோடி ரூபாய்
2018-19 ம் ஆண்டு - 11 கோடி ரூபாய்
இந்த மோசடி தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை
2016-17 ம் ஆண்டு - 208 வழக்குகள்
2017-18 ம் ஆண்டு - 222 வழக்குகள்
2018-19 ம் ஆண்டு - 214 வழக்குகள்
2017-18 ம் ஆண்டு - 222 வழக்குகள்
2018-19 ம் ஆண்டு - 214 வழக்குகள்
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே கருதப்படுகிறது. இங்குள்ள மக்கள் தங்கள் வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பதற்காக ஒதுக்குகிறார்கள். இப்படி சேமிப்பவர்களையே டார்கெட் செய்து மோசடி செய்கிறார்கள். 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் செல்போன் மற்றும் ஆப்களை சரிவர பயன்படுத்த தெரியாததால் இந்த மோசடி நடக்கிறது. வங்கி தகவல்களை திருடும் புதிய ஆப்பை பதிவிறக்கம் செய்ய வைத்து, ஒருவரது வங்கிக் கணக்கின் முக்கிய தகவல்களை திருடுகிறது இந்தக் கும்பல்.
தொடர்ந்து வங்கிகள் தங்கள் தரப்பில் இருந்து விழிப்புணர்வுகளை கொடுத்தாலும் இந்த மோசடி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகளவு இன்டெர்நெட் பயன்பாடு மற்றும் அதிகளவு ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் ஈடுபடும் பிரதான மாநிலங்களில் ஒன்று தமிழகம். மோசடியாளர்கள் கவனம் தமிழகம் நோக்கி வருவதற்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்கின்றனர் சைபர் வல்லுனர்கள். இதுபோன்ற மோசடிகளை வெளியே சொல்வதற்கு பயந்து புகார் அளிக்காமல் பலரும் விட்டுவிடுவதால் மோசடியாளர்கள் தைரியமாக தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

2017ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி இந்திய அளவில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் ஆன்லைனின் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 13 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழலில், இதுபோன்ற மோசடிகளைக் களைய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
credit ns7.tv