திங்கள், 1 ஜூலை, 2019

ராசிமணல் பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருங்கற்கால சின்னங்கள் கண்டுபிடிப்பு! July 01, 2019


Image
தருமபுரி மாவட்டம் ராசிமணல் பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருங்கற்கால சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
ராசிமணல் பகுதியில் பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெருங்கற்கால சின்னங்கள், கல்வட்டங்கள் இருப்பதை கண்டறிந்தனர். சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான அந்த கல்வட்டங்களை ஆய்வு செய்ததில், பெருங்கற்கால மக்கள் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்திருக்கலாம் என  தெரிவித்துள்ளனர். 
இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த பேராசிரியர் சந்திரசேகர், இந்தியாவில் இந்தளவிற்கு வேறு எங்கும் பெருங்கற்கால சின்னங்கள் கிடைக்கவில்லை என்றும் இதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஆய்வு செய்தால் கீழடி போன்று மனித நாகரிகத்தின் வேறொரு பரிணாமத்தை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். 
credit ns7.tv