credit ns7.tv
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில், ராகுல்காந்தி உறுதியாக இருக்கும் நிலையில், இன்று அவர் 5 மாநில காங்கிரஸ் முதல்வர்களை சந்தித்து பேசுகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஐந்து மாநில (பஞ்சாப், ராஜஸ்தான், ம.பி.சத்தீஸ்கர், புதுச்சேரி) காங்கிரஸ் முதல்வர்களையும் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த துணைமுதல்வரையும சந்திக்கிறார்.
ராகுல் காந்தியின் இல்லத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கடந்த மே 25ந் தேதி நடந்த
செயற்குழு கூட்டத்தில் ராஜினாமா செய்த ராகுல்காந்தி தனது முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த முதல்வர்கள் ராகுலின் முடிவை மறு பரிசீலனை செய்யக் கோரலாம். இத்தோடு தோல்வியடைந்த குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேஷம் போன்ற மாநிலங்களில் இருந்து ஒரு வேட்பாளர் கூட நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாத நிலையில் இம்மாநில முதல்வர்களையும் பொறுப்பாக்க அவர்களையும் ராஜினாமா செய்யவைக்க கட்சியில் சில தலைவர்கள் ராகுலை வலியுறுத்துகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுடன் சில கொள்கை விவகாரத்தில் எப்படி அணுகுவது என்பது குறித்தும் ராகுல் காந்தி காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.