ஞாயிறு, 7 ஜூலை, 2019

நண்டை கைது செய்யவேண்டும்!” - காங். பிரமுகர் புகார்! July 07, 2019

credit ns7.tv
Image
நண்டை கைது செய்யக்கோரி காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் காவல்நிலையத்திற்கு நண்டை எடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று, மகராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அணை ஒன்று இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. இதனை அடுத்து, அணை இடிந்துவிழுந்ததற்கான காரணம் குறித்து அம்மாநிலத்தின் நீர் பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கமளித்தார்.
அப்போது, கடந்த 2004ம் ஆண்டு அந்த அணை கட்டப்பட்டது ஆனால், இதுவரையில் எந்த பாதிப்பும் அடைந்ததில்லை என தெரிவித்தார். மேலும், சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில், அணையின் நீர்மட்டம் உயர்ந்தது எனவும் அப்பகுதியில் நிறைய நண்டுகள் இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தினால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் இளைஞரணி தலைவர், நண்டுகளை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்று, இவற்றால் தான் அணை உடைந்துவிட்டது என அமைச்சர் நினைத்தால், கொலை செய்த குற்றத்திற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நண்டுகளை கைது செய்து தண்டனை வழங்கவேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். 
மேலும், அணை உடைந்ததில் 23 பேர் அடித்துச்செல்லப்பட்டனர். இன்னும் சிலரை காணவில்லை, ஆனால் நண்டுகளால் தான் அணை உடைந்துவிட்டது என அமைச்சர் கூறுகிறார் என காங். இளைஞரணி தலைவர் குற்றம்சாட்டினார்.