ஒரே நாடு, ஒரே தீர்ப்பாயம் திட்டம் காவிரி நதிநீர் ஆணையத்தை உருக்குலைத்துவிடும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் அமைக்கும் சட்ட மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள செயல், உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்க 2017ம் ஆண்டு மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். ஆனால், விடாப்பிடியாக, அதே மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரே நதித் நீர் தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா, எந்த விதத்திலும் காவிரி இறுதித் தீர்ப்பிற்கு ஊறுவிளைவித்து விடக்கூடாது என தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே நதிநீர் தீர்ப்பாயம் போன்றவை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
credit ns7.tv